குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யாமல் அவ்வப்போது மிதமான மழையாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. அணைகளின் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாலும், கால்வாய்கள் முழுமையாக தூர்வாராததாலும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை மற்றும் இரவு நேரங்களில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள் மற்றும் திற்பரப்பு, குலசேகரம், திருநந்திக்கரை, பொன்மனை, சுருளகோடு, திருவரம்பு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் இந்த பகுதிகளில் வாழை, அன்னாசி, மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.