காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனம்

டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

Update: 2022-07-04 17:04 GMT

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது. அந்த வாகனம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தது. அதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், நெரிசலான குடியிருப்பு பகுதி, முதியோர் இல்லங்கள், அதிக காச நோயாளிகள் வசிக்கும் பகுதிகள், தொழிற்சாலைகள், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், மேலும் புலம்பெயர் மக்கள், கல்குவாரி மற்றும் செங்கல் சூளை போன்ற தொழில் செய்யும் மக்கள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மற்றும் மது புகையிலை பழக்கம் உள்ளவர்களை கண்டறிந்து, இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை மூலம் காசநோய் கண்டறியப்படும் என்றார்.

இந்த நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் கணினி பொருத்தப்பட்ட அறை என 2 அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அப்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, துணை இயக்குனர்கள் (காசநோய்) ஜெயஸ்ரீ (காசநோய்), மணிமேகலை (குடும்ப நலம்), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (காசநோய்) ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்