வீடுகளில் செல்போன் திருட்டு
சுவாமிமலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்வது போல் சரக்கு ஆட்டோவில் வந்து பூட்டிய வீடுகளில் செல்போன்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கபிஸ்தலம்;
சுவாமிமலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்வது போல் சரக்கு ஆட்டோவில் வந்து பூட்டிய வீடுகளில் செல்போன்களை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
செல்போன்கள் திருட்டு
சுவாமிமலை கீழ வடம் போக்கி தெரு மற்றும் கண்டோஜி தெரு ஆகியவற்றில் உள்ள 2 வீடுகளில் நேற்று மதியம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் காணாமல் போனதாக அப்பகுதியை சேர்ந்த ராதா மகன் சக்தி கதிரவன்(வயது20) சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் . விசாரணையின் சுவாமிமலை பகுதியில் சந்தேகப் படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சுவாமிமலை பகுதியில் லோடு ஆட்டோ மூலம் பழைய இரும்பு பொருட்கள் வாங்குவதாக கூறிக்கொண்டு பூட்டி இருந்த வீட்டில் செல்போன்களை திருடியது தெரியவந்தது.
கைது
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சக்கராப்பள்ளியை சேர்ந்த ஹாஜாமைதீன் மகன் இப்ராஹிம்ஷா (21), அன்சாரி மகன் ரஹ்மத்துல்லாஹ்(19) மற்றும் ஒருவர் சிறுவன் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுவன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.