வாலிபரிடம் செல்போன், ரூ.30 ஆயிரம் பறிப்பு
வாலிபரிடம் செல்போன், ரூ.30 ஆயிரம் பறிப்பு
கணபதி
கோவை கணபதி அடுத்துள்ள சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண் (வயது27).தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு செல்போன் செயலி மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த செல்போன் செயலி மூலம் அந்த வாலிபர் அருணை தொடர்பு கொண்டு சின்னவேடம்பட்டி நாராயண பெருமாள் கோவிலுக்கு அருகில் வரச்சொன்னார்.
அங்கு அருண் சென்றபோது, 3 பேர் அருணிடம் இருந்த செல்போனை பிடுங்கினர்.பின்னர் அருண் செல்போனில் கூகுள் பே செயலியில் இருந்து ரூ.30 ஆயிரத்தை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.இதுகுறித்து அருண் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.