அமைச்சருக்கு, முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நன்றி

அமைச்சருக்கு, முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.

Update: 2023-04-06 19:15 GMT

நாகை சட்டசபை தொகுதியில் உள்ள சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். நாகூர் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டசபையில் முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் சட்டசபையில் நடந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது, நாகை சாமந்தான்பேட்டையில் ரூ.40 கோடி செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி - கீச்சாங்குப்பம் பகுதிகளில் ரூ.14 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். இதற்காக நாகை சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்