காமராஜர் உருவப்படத்திற்கு எம்.எல்.ஏ. மரியாதை
சங்கரன்கோவிலில் காமராஜர் உருவப்படத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, வெற்றி விஜயன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஆதிதிராவிடர் அணி கே.எஸ்.எஸ். மாரியப்பன், நெசவாளர் அணி சந்திரன், இளைஞரணி முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.