ரேஷன்கடையில் எம்.எல்.ஏ. ஆய்வு
சாத்தூர் அருகே ரேஷன்கடையில் ரகுராமன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா சிந்தபள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ரகுராமன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் ஜெயலட்சுமி உடனிருந்தனர். அப்போது எம்.எல்.ஏ. கூறுைகயில், மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் எம்.எல்.ஏ., வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தொலைபேசி எண்கள் அனைத்து ரேஷன் கடைகளிலும் இருக்கும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது ம.தி.மு.க. ஒன்றியச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.