அரவிந்த் கெஜ்ரிவாலுவுக்கு பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'டுவிட்டரில்' வாழ்த்து

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-16 13:39 GMT

சென்னை,

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

டெல்லி வாழ் மக்களின் நலனுக்காக உழைத்து வரும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.எதிர்வரும் ஆண்டு அவருக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையட்டும். இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்