குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மாயம்

திருவண்ணாமலையில் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மாயம்

Update: 2022-06-16 12:12 GMT

திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் பெண் குழந்தைகள் இல்லம் உள்ளது.

இந்த இல்லத்தை சேர்ந்த 13 வயது மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகள் அருகில் உள்ள கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

வழக்கம்போல் நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் இருவரும் மாலையில் குழந்தைகள் இல்லத்திற்கு திரும்பி வரவில்லை.

இல்லத்தின் கண்காணிப்பாளர் சங்கீதா சிறுமிகளை பல இடத்தில் தேடியும் கிடைக்காததால் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்