மலையில் மர்ம நபர்கள் தீ வைப்பு
மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் மரங்கள் எரிந்து நாசமாயின.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரத்தில் கனககிரீஸ்வரர் கோவில் மலையில் உள்ளது. இங்குள்ள பெரியநாயகி தாயார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் மலை மீது உள்ள கனககிரீஸ்வரர் கோவில் பின்புறத்தில் யாரோமர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். இந்த தீயில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.
அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் வராததால் மரங்கள் எரிந்து நாசமானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.