சம்பளம் கொடுக்காமல் மிரட்டல்

Update: 2023-10-09 15:48 GMT


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தேன்மொழி (வயது 25) தனது கணவருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், நானும் எனது கணவரும் மூலனூர் பம்மியம்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வேலை செய்ய கடந்த ஜூலை மாதம் சேர்ந்தோம். ஒரு மாதம் கடந்தும் தோட்டத்து உரிமையாளர் சம்பளம் கொடுக்கவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ செலவுக்கு பணம் கேட்டும் கொடுக்காமல் என்னை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். பின்னர் சாதி பெயரை சொல்லி இருவரையும் மிரட்டுகிறார்கள். எங்களுக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்