அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
வடக்கன்குளம் அதிசய விநாயகர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அதிசய விநாயகர், அம்பாள் தேவி, சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் சித்திரை திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் மாலையில் அதிசய விநாயகர் ரதவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் அதிகாலை, முற்பகல், வேளைகளில் தீபாராதனைகள் நடைபெற்றது.
10-ம் திருவிழா அன்று இரவில் அம்பாள் தேவியின் மின்னொளி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழா ஏற்பாடுகளை திருவிழா திருப்பணி குழு மற்றும் அதிசய விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.