பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகை உள்ளது. இங்கு வருடம் தோறும் செப்டம்பர் 1-ந் தேதி தமிழக அரசு சார்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், தென்காசி மாவட்ட செயலாளர்கள் ராஜா எம்.எல்.ஏ., ஜெயபாலன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன்.முத்தையா பாண்டியன், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி தென்காசி மாவட்ட தலைவர் எம்.விஜய பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.