விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு
ராமநாதபுரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மு.க.ஸ்டாலின் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17,18-ந் தேதிகளில் ராமநாதபுரம் வருகிறார். ராமநாதபுரம் அருகே பேராவூரில் 17-ந்தேதி தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 18-ந் தேதி மண்டபத்தில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக 2 இடங்களிலும் பல ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று முன்தினம் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் மற்றும் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அமைச்சர்கள் ஆய்வு
இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் பார்வையிட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர்கள் பிரபாகரன், புல்லாணி, சுப்புலட்சுமி ஜீவானந்தம், தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பாரகு, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.