அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-03-14 19:03 GMT

சீர்காழி:

சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க..ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை பெரும்பான்மையான திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். குறிப்பாக மகளிருக்கு இலவச பஸ் பயணத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீநகரில் ரூ.1 கோடியோ 30 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம், சீர்காழி வாய்க்காங்கரை தெருவில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம், ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட பல்ேவறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 15-ந் தேதி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு பள்ளியில் நடைபெறும் விழாவிற்கு வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்