ரூ.2¼ கோடியில் மக்கள் நலத்திட்ட பணிகள்

ரூ.2¼ கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்ட பணிகளை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.

Update: 2023-08-22 12:14 GMT

மூலனூர்,

மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2¼ கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்ட பணிகளை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.

ரூ.2¼ கோடிக்கு பணிகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

மூலனூர் ஒன்றியம் புஞ்சைத் தலையூரில், தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் மூலம் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு கடன் பத்திரம் வழங்குதல், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு சமுதாய கிணறு அமைத்தல், ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடத்தை திறந்து வைத்தல், புஞ்சை தலையூர் கிராம ஊராட்சியில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல், மரக்கன்று நடுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது.

அமைச்சர் தொடங்கிவைத்தார்

இதுபோல 15-வது நிதி குழு மாநிலத்தின் மூலம் ரூ.7.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தல், பொன்னிவாடி கிராம ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தல், உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.


Tags:    

மேலும் செய்திகள்