15 நிமிடம் லிப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்...!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டில் அமைச்சர் சிவசங்கர் சிக்கிகொண்டார்.

Update: 2023-01-05 07:02 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தரை தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு லிப்டின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது.

உடனே தகவல் அறிந்து வந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமைச்சர் சிவசங்கரை லிப்டில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதன் காரணமாக அமைச்சர் சிவசங்கர் 15 நிமிடங்கள் லிப்டில் மாட்டிக் கொண்டார்.

லிப்டில் அமைச்சர் சிவசங்கர் சிக்கிக்கொண்ட சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்