அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-26 10:17 GMT

சென்னை,

சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் 3-வது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இன்றுடன் காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்