புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிலையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.