அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை - மருத்துவமனை நிர்வாகம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-22 04:21 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை, சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந்தது.


அறுவை சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தத்தின் இயக்கம் சீராக உள்ளது என்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தீவிர சிகிச்சை பிரிவில், பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் - நர்சுகள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.யூ. வார்டில் 2 அல்லது 3 நாட்கள் அவர் சிகிச்சை பெறுவார் என்றும், அதன்பிறகு சுமார் ஒரு வார காலம் சாதாரண வார்டில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்