அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி வருகை: விழாமேடை அமைக்கும் இடத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டார்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) அரசு விழாவில் பங்கேற்க நெல்லை மாநகருக்கு வருகிறார். இதற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மருத்துவக் கல்லூரி மைதானத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல்லை மத்திய, மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ, கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, வருவாய், போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.