விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை

விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-07-11 16:10 GMT

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம் காந்திசிலை அருகே நேற்று தமிழக யாதவ மகாசபை, தென்இந்திய யாதவ மகாசபை ஒருங்கிணைந்து சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை குருபூஜையாக கொண்டாடினர்.

இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகுமுத்துக்கோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, யாதவ மகாசபையின் மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், சோடாரவி, இளங்கோ, ஏழுமலை, ராஜா, அரங்கநாதன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்