மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு

விழுப்புரம் நகரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தாா்.

Update: 2022-11-03 18:45 GMT

விழுப்புரம்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட அனிச்சம்பாளையம், திரு.வி.க. வீதி, திருச்சி சாலை, மணி நகர், சுதாகர் நகர் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்