அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை
தேசிய கல்விக்கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்துகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.
தேசிய கல்விக்கொள்கை குறித்து தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்துகிறார்.