வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்த்தார்

வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்த்தார்

Update: 2022-08-31 18:00 GMT

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கொள்ளிடம் ஆறு மற்றும் கிராமங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். பின்னர், முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு காலை உணவு வழங்கியதோடு அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் அறிவுறுத்தினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி உள்பட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






Tags:    

மேலும் செய்திகள்