தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகநடவடிக்கை எடுக்கப்படும்- அம்பை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருக தக்க நடவடிக்ைக எடுக்கப்படும் என்று அம்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
அம்பை:
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருக தக்க நடவடிக்ைக எடுக்கப்படும் என்று அம்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் அம்பையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கிரகாம்பெல், ஒன்றிய செயலாளர் அம்பை பரணிசேகர், சேரன்மாதேவி முத்துப்பாண்டி பிரபு, முத்துகிருஷ்ணன், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.சி.பிரபாகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழில் வளர்ச்சி
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். அதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்து வருகிறார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நெல்லை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருக தி.மு.க. ஆட்சி தக்க நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுயர மாலை
முன்னதாக அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோருக்கு கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்தனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் செல்வகருணாநிதி, வக்கீல் செல்வசூடாமணி, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், சீவலமுத்துக்குமார், அம்பை நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட அணி நிர்வாகிகள் முத்துப்பாண்டி, ராமையா, வேல்முருகன், நகர செயலாளர் சேரை மணிஷா செல்வராஜ், பத்தமடை சிந்தாமாதர், வீரவநல்லூர் சுப்பையா, மணிமுத்தாறு முத்துகணேசன், மேலச்செவல் மணிகண்டன், கோபாலசமுத்திரம் வாணுவமலை, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பிரம்மதேசம் ராம்சங்கர், வெள்ளாங்குழி முருகன், அயன்சிங்கம்பட்டி முத்துகிருஷ்ணன், கூனியூர் முத்துகிருஷ்ணன், தெற்கு வீரவநல்லூர் சந்தனமாரி, மூலச்சி சமுத்திரக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன் தொகுத்து வழங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரவீந்தர் நன்றி கூறினார்.
மினி டிராக்டர் சாவி
முன்னதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தென்காசி மாவட்ட உள்ளாட்சி துறை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கடையம் யூனியனுக்கு உட்பட்ட கீழக்கடையம் பஞ்சாயத்துக்கு மினி டிராக்டர் சாவியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் பூமிநாத்திடம் வழங்கினார்.
மேலும் சிவகிரியில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் பூரண கும்ப மரியாதை மற்றும் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.