'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற பாடலை பாடி பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே' என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடி அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

Update: 2023-07-17 17:32 GMT

சிறந்த விளையாட்டு மையமாக...

வேலூர் மாவட்டம், காட்பாடி விளையாட்டு மையத்தில் அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 'காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டுள்ளோம். நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு மையத்தில் நிரந்தரமான தங்கும் விடுதி கட்டித்தர வேண்டும். தற்போது உள்ள பணி ஆட்கள் போதாது என்பதால் கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும் என கேட்டுள்ளோம். காட்பாடி விளையாட்டு மையத்தை தமிழ்நாட்டின் சிறந்த விளையாட்டு மையமாக மாற்றி காட்டுவேன்' என்றார்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது குறித்து கேட்டதற்கு எனக்கு தெரியாது என கூறினார். பின்னர் அவர் கூறியதாவது:-

'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே' என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடினார்.

இது பழிவாங்கும் நடவடிக்கையா என கேட்டதற்கு, பின்ன என்ன? எல்லாம் அரசியல்தான் என்றார்.

பேட்டியின் போது வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்