எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு

அவிநாசி திட்டம், சர்பங்கா திட்டம் நிறைவேற்ற, நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்

Update: 2022-09-13 09:14 GMT

அத்திக்கடவு,

அவிநாசி திட்டம், சர்பங்கா திட்டம் நிறைவேற்ற, நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை, விண்ணம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் மிதி வண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திக்கடவு, அவிநாசி திட்டம், சர்பங்கா திட்டம் நிறைவேற்ற நில ஆர்ஜிதம் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், இந்த திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, குற்றஞ்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்