அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-04-14 18:45 GMT

திருச்செந்தூர்:

டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம், நடுநாலுமூலைகிணறு ஆகிய ஊர்களில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும், கீழ நாலுமூலைகிணற்றில் உள்ள அம்பேத்கர் உருவ படத்திற்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன், துணை தலைவர் முருகன், நடுநாலுமூலைகிணறு ஊர் தலைவர் சிவசுபிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்