662 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

662 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

Update: 2022-09-10 18:10 GMT

திருவண்ணாமலை

662 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் அரசின் நலத்திட்ட உதவிகள், வீட்டு மனை பட்டா வழங்குதல் மற்றும் நிழற்கூடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் எம்.பி.யான த.வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு நிழற்கூடங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, விலையில்லா சைக்கிள், சிறு மற்றும் குறு விவசாய சான்று, சாதி சான்றிதழ் என 13 அரசு துறைகளின் சார்பில் 3 ஆயிரத்து 662 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.விழாவில் சி.என்.அண்ணா துரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், தடகள சங்க மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், துணை தலைவர் பாரதி ராமஜெயம், திருவண்ணாமலை ஒன்றிக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், தண்டராம்பட்டு ஒன்றியக்குழுத் தலைவர் பரிமளா கலையரசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நிர்வாகிகள் அருணை வெங்கட், பிரியாவிஜயரங்கன், வெற்றிடிஜிட்டல் கார்த்தி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஷெரீப், ஆருத்ராபட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பாய்ண்ட் எழுமலை, தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், பன்னீர்செல்வம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்