மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-03 18:34 GMT

பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள்

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் முத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் வெள்ளகோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளையும், பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் விதை ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தூய மல்லி ரக பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும் வருவாய்த்துறை சார்பில் 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

நன்கொடை ஆவணம்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மகன் எஸ்.ஆதவனுக்கு சொந்தமான ரூ.4 லட்சம் மதிப்பிலான 2.72 சென்ட் பரப்பளவு கொண்ட நிலத்தினை முத்தூர் பேரூராட்சி, மாதவ ராஜபுரத்தில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில்நன்கொடை ஆவணமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு அந்த பத்திரத்தை அமைச்சர், கலெக்டர் எஸ்.வினீத்திடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்