அடிப்படை வசதிகள் குறித்து கருத்துகேட்பு கூட்டம்

தாராபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு கலைக்கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

Update: 2022-07-01 16:14 GMT

தாராபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு கலைக்கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

கருத்து கேட்பு கூட்டம்

தாராபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் டாக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார்.

கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனர் உலகி, நகராட்சி தலைவர் கே.பாப்புகண்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் புஷ்பலதா, ஆர்.டி.ஓ.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தாராபுரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அரசு கல்லூரிக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் தாராபுரத்தில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் யாரும் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.

தாராபுரத்தை சுற்றி 40 கி.மீ தூரத்துக்கு அரசு கல்லூரி இல்லை. இதனால் தாராபுரத்திற்கு அரசு கலைக்கல்லூரி கொண்டு வர வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல முழு முயற்சி எடுத்து தாராபுரத்துக்கு அரசு கல்லூரி கொண்டு வந்துள்ளேன். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

500 விண்ணப்பங்கள்

தாராபுரம் அரசு கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு சுமார் 500 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு அரசு கல்லூரிக்கு நிரந்தரமாக கட்டிடம் கட்டித்தரும் வரை தற்காலிகமாக கலைக்கல்லூரி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்லூரி நடக்கும். கல்லூரியின் அடிப்படை கட்டமைப்புக்கு நிதி வழங்கிய தொழிலதிபர்கள் பொதுமக்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தாராபுரம் அரசு கலை கல்லூரி தொடங்க அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக ஒன்றிய தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ரூ.1 லட்சம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வராஜ், தாராபுரம் நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், ஒன்றிய செயலாளர்கள் மூலனூர் பழனிசாமி, குண்டடம் சந்திரசேகர், அப்போது கல்லூரி வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தங்கராஜ், செயலாளர் கந்தவிலாஸ் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ரோட்டரி முத்து ராமலிங்கம், வர்த்தக கழக சங்கத்தலைவர் ஞானசேகரன், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் சாரதாஸ் சண்முகவேல் உள்பட தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்