தளி
பள்ளி கல்வித்துறையின் சார்பில் குடியரசு தின மற்றும் பாரதியார் தின உடுமலை அளவிலான குறுமைய தடகள போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த போட்டியில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 1500 வீரர் வீராங்னைகள் கலந்து கொண்டுள்ளனர். 2 -ம் நாள் நிகழ்வாக நேற்றும் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. ஆயிரத்து 500 மீட்டர், 600, 100, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடைதாண்டுதல் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல்,தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது.
அப்போது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர். அதைத்தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.அப்போது அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.