பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.1,000 வழங்க வேண்டும்; தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக தினமும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-08-22 20:23 GMT

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக தினமும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

குறைந்தபட்ச ஊதியம்

1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு (வேலை பழகுனர்களை தவிர) குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் பொருட்டு கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுவில், குழுவின் செயலாளராக கோவை தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி (அமலாக்கம்), தற்சார்பு உறுப்பினர்களாக திருப்பூர் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கக இணை இயக்குனர் சரவணன் (பஞ்சாலை), கோவை புள்ளியியல், பொருளியல் துறை உதவி இயக்குனர் ஹேமலதா, தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளாக நெல்லை எல்.பி.எப். பேரவை செயற்குழு உறுப்பினர் க.நெடுஞ்செழியன், கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த தியாகராஜன், கோவை இந்து மஸ்தூர் சபா டி.எஸ்.ராஜாமணி, கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம், ஆல் இந்தியா டிரேடு யூனியன் காங்கிரஸ் மா.ஆறுமுகம், கோவை சென்டர் ஆப் இந்தியன் டிரேடு யூனியன் பத்மநாபன், கோவை தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க துணை பொதுச்செயலாளர் பாலசுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் நிர்வாக தரப்பு பிரதிநிதிகளாக கோவை தி சதர்ன் இந்தியா மில்ஸ் அசோசியேசன் பொது செயலாளர் செல்வராஜூ, கோவை தி சவுத் இந்தியா ஸ்பின்னர்ஸ் அசோசியேசன் ஜெகதீஸ்சந்திரன், கோவை நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வெங்கடேஷ், சென்னை லோயல் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் லிமிடெட் ராமகிருஷ்ணன், திண்டுக்கல் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேசன் வெங்கடாசலம், திருப்பூர் ராயல் கிளாசிக் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கருத்து கேட்பு கூட்டம்

இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நெல்லை திருமால்நகர் ஆணையர்குளத்தில் உள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. தலைவரான கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, செயலாளரான உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி, நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி, உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா ஆகியோர் தலைமை தாங்கி கருத்துகளை கேட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் சடையப்பன், ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் முருகன், விக்கிரமசிங்கபுரம் ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலாளர் கல்யாணசுந்தரம், பாபநாசம் தொழிலாளர் சங்க பொருளாளர் ராமரத்தினம், செயலாளர் சுப்பிரமணியன், அகத்தியர் தொழிலாளர் சங்க செயலாளர் சிட்டிபாபு, அ.தி.மு.க. தொழிற்சங்க பொருளாளர் பால்பாண்டி, சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட பஞ்சாலை சங்க நிர்வாகிகள் வடிவேல்குமார், மாரியப்பன், ராமர், நம்பி, மணிகண்டன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ரவி தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலையளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

ரூ.1,000

தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசுகையில், பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்