நெய்தல் புத்தக திருவிழாவையொட்டி கடலூரில், மினி மாரத்தான் போட்டி; கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

நெய்தல் புத்தக திருவிழாவையொட்டி கட லூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-27 18:45 GMT

புத்தக திருவிழா

கடலூர்- 30, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நெய்தல் புத்தக திருவிழா, அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை 11 நாட்கள் கடலூர் சில்வர் பீச்சில் நடக்கிறது. இந்த நெய்தல் புத்தக திருவிழாவை பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலூர் டவுன்ஹால் அருகில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

போட்டியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசு

மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். தொடர்ந்து மினி மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக நடந்தது. டவுன்ஹாலில் இருந்து தொடங்கி, பாரதிசாலை, கடற்கரை சாலை வழியாக சென்று கடலூர் சில்வர் பீச்சில் முடிவடைந்தது.

இந்த போட்டிகளில் மாணவ-மாணவிகளே அதிகம் பேர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷினி ராஜா, ஆராமுது, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்