விக்கிரவாண்டி அருகேலாரி மீது மினிலாரி மோதல்; கிளீனர் சாவு

விக்கிரவாண்டி அருகே லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்தார்.

Update: 2023-05-16 18:45 GMT


விக்கிரவாண்டி. 

திருவாரூர் மாவட்டம் கோவிந்தபுரியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது மகன் தமின் (வயது 39.) இவர் ஒரு தனியார் கூரியரில், டிரைவராக வேலை பார்க்கிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கூரியர் மினி லாரியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் கிளீனராக சென்னையை சேர்ந்த இப்ராஹிம் (45) என்பவர் உடனிருந்தார்.

நேற்று அதிகாலை, 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஒரு தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த பொது, திடீரென தமினின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு லாாியின் பின்னால் பயங்கரமாக மோதியது.

உடல் நசுங்கி சாவு

இதில் கூரியர் மினி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், மினிலாரியில் இடதுபுறம் அமர்ந்திருந்த இப்ராஹிம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். படுகாயமடைந்த தமின் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்