மினி பஸ் கண்டக்டர் தற்கொலை

மண்டைக்காடு அருகே மினி பஸ் கண்டக்டா் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-05 15:20 GMT

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு அருகே மினி பஸ் கண்டக்டா் தற்கொலை செய்து கொண்டார்.

திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் மேலவிளையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 25), மினி பஸ் கண்டக்டர். சதீஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து சதீஷ்குமார் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சதீஷ்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் வேலைக்கு சரிவர செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சதீஷ்குமார் மன வருத்தத்தில் இருந்தார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மண்டைக்காடு அருகே உள்ள குன்னங்காடு மாதவிளை பகுதியில் சதீஷ்குமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இ்ருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்