மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேடசந்தூர் அருகே மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-21 15:02 GMT

வேடசந்தூர் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). மில்தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றியபோது, அதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தோப்பூருக்கு தினேஷ்குமார் வந்தார். பின்னர் அவர் தோப்பூர் அருகே உள்ள பாகாநத்தம் சென்று, ஒரு மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தினேஷ்குமாரின் தந்தை பழனிச்சாமி எரியோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமார் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்