பால் வியாபாரி தற்கொலை

கோவில்பட்டி அருகே பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-04 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கலாங்குலம் காளியம்மன் கோவில் நடுத் தெருவைச் சேர்ந்த சந்தனசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). பால் வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று காளியம்மன் கோவில் அருகேயுள்ள புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கொப்பம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்