பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மேச்சேரியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-22 19:45 GMT

மேச்சேரி:-

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மேச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் அரியாக கவுண்டர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் மணிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கவேலு, புஷ்பா, ஒன்றிய செயலாளர் மாது, ஒன்றிய துணைத்தலைவர் ரத்தினவேல், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன் உள்பட விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்