நாராயண சுவாமி கோவிலில் பால்முறை திருவிழா
உடன்குடி சந்தையடியூர் நாராயண சுவாமி கோவிலில் பால்முறை திருவிழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி சந்தையடியூர் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆடி மாத பால்முறை திருவிழா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அய்யா பவனி வருதல், தர்மம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, உம்பான் அன்னதர்மம் வழங்கல், சந்தன குடம் பவனி, சிறுவர்-சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பக்தர்களுக்கு பதநீர் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பால் வைத்தல், பூஞ்சப்பரத்தில் அய்யா பவனி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள், மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.