முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

ஆணைமேலகரம் முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.

Update: 2022-06-28 17:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே மல்லியம், ஆணைமேலகரம் கிராமம் நத்தமேட்டு தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், புஷ்பக்காவடி, அலகு காவடி, கூண்டு காவடி, பால்குடங்களை எடுத்து கொண்டு திரளான பக்தர்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நத்தமேட்டு தெரு மக்கள் செய்திருந்தனர். நேற்று அம்மன் வீதி உலா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்