பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-05-06 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே புல்வாய்குளம் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான சீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை திருவிழா நடைபெறும். இதில் பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து ஆற்றில் இறங்கி மீண்டும் சீனிவாச பெருமாள் கோவிலை அடைவார். இந்த ஆண்டு விழாவையொட்டி ஊர் கிராம பொதுமக்கள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த நெல் கேழ்வரகை இடித்து புட்டு வைத்து பெருமாளுக்கு படைத்து வினோத வழிபாடு நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் கிராமத்தினர் மாணவ நல மன்றம் மற்றும் குழுக்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்