பால்குட ஊர்வலம்

செய்யாறில் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-02-27 12:33 GMT

தூசி

செய்யாறு மார்க்கெட் காமராஜ் நகரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக சுமார் 2 ஆயிரம் பேர் ஞானமுருகன்பூண்டி முருகன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

மேலும் அலகு குத்தி அங்காளம்மன் அலங்கரித்த வாகனங்களை இழுத்து வந்து சிலர் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

பால்குட ஊர்வலம் ஆற்றுபாலம், திருவோத்தூர் பகுதி வழியாக காந்தி சாலை மார்க்கெட் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நிறைவிடைந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்