எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் புதுத்தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்ராஜ், நகரமன்ற உறுப்பினர் மலர்விழி கலியபெருமாள், வர்த்தகர் பிரிவு செயலாளர் ெரயில்பாஸ்கர், நகர பொருளாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.