எம்.ஜி.ஆர். நினைவு தினம்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-12-25 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மேடை பிள்ளையார் கோவில் அருகே எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, செய்துங்கநல்லூரில் மெயின் பஜாரில் கருங்குளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருங்குளம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அய்யம்பெருமாள், பரமேஸ்வரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி, செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருங்குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், உருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனார்.

இதேபோன்று, ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் கராத்தே ரஜித், ஆறுமுகநேரி நகர செயலாளர் சின்னதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்