எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-10-17 18:33 GMT

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் ெபருமாள்பேட்டை ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் பெருமாள்பேட்டை பகுதியில் 70 அடி உயர அ.தி.மு.க. கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன், நகர துணை செயலாளர் கோவிந்தன், பொருளாளர் தன்ராஜ், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது உள்பட கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்