எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கல்லூரியில் 646 மாணவர்களுக்கு பட்டங்கள்
ஆரணி எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கல்லூரியில் 646 மாணவர்களுக்கு பட்டங்களை கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்
ஆரணி
ஆரணி இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக்கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி அரங்கில் நடந்தது.
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தரும், ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர்கள் ஏ.சி.ரவி, ஏ.சி.பாபு ஆகியோர் முன்னிலை வைத்தனர். கல்லூரி முதல்வர் ஜி.சுகுமாரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் எம்.கே.பத்மநாபன், சட்டக்கல்லூரி முன்னாள் துணைவேந்தர் ந.முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து கல்லூரி தலைவர் ஏ.சி.சண்முகம் 646 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், இங்கு நான் கல்லூரியை தொடங்கி 25 ஆண்டுகள் முடிவிற்று 26-வது ஆண்டு நடைபெறுகிறது.
நீங்கள் பலருக்கு வேலை தரக்கூடிய அளவில் உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களை கண்டிப்பாக கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரிகளை எப்போதும் மறந்துவிடக்கூடாது. எனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டக்கல்லூரியில் படித்து இன்று இந்தியா முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை தொடங்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர், இங்கு படித்த கல்லூரி மாணவர்கள் பல நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும் இதுபோல சாதனையாளராக வரவேண்டும் என்றார்.
விழாவில் ஏ.சி.எஸ்.கல்வி குழும முதல்வர்கள் என்.திருநாவுக்கரசு, பி.ஸ்டாலின், வி.வையாபுரிராஜா, கல்லூரி துணை முதல்வர் ஆர்.வெங்கட்ராமன், ஏ.சி.எஸ். பள்ளி முதல்வர் செலின் திலகவதி, கண்ணம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ரஞ்சினி, ஆலோசகர் அருளாளன் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.