எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஆலங்குளம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
ஆலங்குளம்:
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.