தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
பாலக்கோடு ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், முன்னாள் நகர செயலாளர் சங்கர், அண்ணா தொழிற்சங்க தலைவர் சக்திவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, பாலகிருஷ்ணன், சுப்ரமணி, விமலன், சாம்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கோவிந்தசாமி, கிரிநாத், சோமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூர், பென்னாகரம்
கடத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கடத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்தோஷ் வரவேற்றார். விழாவில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரவீந்திரன், சசிகுமார், ஷபியுல்லா, சுரேஷ், அம்பேத்கர், கந்தசாமி, முருகன், கோபி, பிரகாசம், மாது, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். விழாவில் ஒன்றிய செயலாளர்கள் வேலுமணி, அன்பு, நகர செயலாளர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர் ரவி, செங்கனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அரூர்
அரூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். விழாவில் சம்பத்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர்கள் பசுபதி, நகர செயலாளர் பாபு என்கிற அறிபழகன், பொறுப்பாளர்கள் செண்பகம் சந்தோஷ், பழனிமுருகன், சிவன், சேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.